சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுக்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தடுக்கும் நோக்கில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரட்னப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
வரிசை முறைமை
பொருட்களை கொள்வனவு செய்ய நாட்டில் நிலவி வந்த வரிசை முறைமையை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மேலும் நிவாரணங்களை அரசாங்கம் மக்களுக்கு வழங்குவதனை தடுக்கவே இவ்வாறு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை எட்ட உள்ள நிலையில் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்து அவற்றை குழப்ப முற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டங்கள்
ஜே.வி.பி., ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் முன்னிலை சோசலிச கட்சி என்பனவே தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு, மின்சாரக் கட்டண குறைப்பு, வட்டி வீத குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நலன்கள் குறித்து அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ள நிலையில் அவற்றை குழப்புவதற்கு இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக சமன் ரட்னப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களை வீதியில் இறக்கி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
