மாகாணசபைத் தேர்தல் வைக்கப்பட்டால் 9 மாகாணங்களிலும் அரசு மண்கவ்வுமாம்! கூறுகின்றார் சமன் ரத்னப்பிரிய
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தற்போதைய அரசு தோல்வியடைந்து மண்கவ்வுவது உறுதி என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அரசுக்கு ஈராண்டு, நாட்டுக்கு மாட்சி எனத் தேசிய மக்கள் சக்தியினர் பிரசாரம் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், நாட்டுக்கு என்ன மாட்சி ஏற்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
வாழ்க்கைச் சுமை

தற்போது வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளதுடன், பொருள்களின் விலைகளும் விசேடமாக எகிறியுள்ளன. ஆளுங்கட்சியினருக்கு வேண்டுமென்றால் இந்த ஆட்சி சிறப்பாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அது சிறப்புடையதாக இல்லை.
அரசு நல்லவற்றைக் செய்திருந்தால், எதற்காக 'அரசு நல்லதா?' என நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி மக்களிடம் கேட்க வேண்டும்? எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்த அரசு 9 மாகாணங்களிலும் தோல்வியடைவது நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியாகும் என்றார்.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan