அப்துர் ரஹ்மானை ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு (Photos)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளரும், பொறியியலாளருமான எம்.எம்.அப்துர் ரஹ்மானை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர்களை காத்தான்குடியில் வைத்து இன்று(16) புதன்கிழமை மாலை சந்தித்த போது இவ் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரன்ஜித் மதும பண்டார நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் இந்த அழைப்பினை விடுத்தனர்.




கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri