ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதே முதலாவது இலக்கு! தலதா அதுகோரள
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளை ஒன்றிணைப்பதே தனது முதலாவது இலக்கு என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க.தலைமையகமான ஶ்ரீகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பொதுச் செயலாளருமான தலதா அதுகோரள இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
பலம்வாய்ந்த அரசியல் சக்தி
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ரணில் விக்ரமசிங்க இந்நாட்டு வரலாற்றில் மிகப் பெரும் சேவையாற்றிய ஒருவர். நாட்டு மக்கள் பட்டினியில் இருந்த காலகட்டத்தில், நாடு வங்குரோத்து நிலையில் இருந்தபோது நாட்டைப் பொறுப்பேற்று, மூன்று வேளையும் தட்டுப்பாடின்றி உணவு கிடைக்கும் வகையில் நாட்டைக்கட்டியெழுப்பியவர்.
வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை விடுவித்தவர். ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் முன்னரைப் போன்று பலம்வாய்ந்த கட்சியாக கட்டியெழுப்புவது அவரது எதிர்பார்ப்பாகும்.

அதன் காரணமாகவே கட்சியின் பொதுச் செயலாளராக என்னை நியமித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தால் பலம்வாய்ந்த அரசியல் சக்தியொன்றாக மாற்றமடைய முடியும்.
அதுவே எனது முதலாவது இலக்காகும். விரைவில் இரண்டு கட்சிகளையும் ஒன்றிணைத்து பலம்வாய்ந்த அரசியல் கூட்டணியொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம் என்றும் தலதா அதுகோரள தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam