ரணில் - சஜித் கட்சிகள் மிக விரைவில் சங்கமம்! இரு தரப்பு பேச்சு ஆரம்பம்
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இரு தரப்பினரையும் இணைப்பதற்கு இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட பேச்சுகள் தோல்வி அடைந்த நிலையில், இதுவே கடைசி முயற்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலை
பேச்சு வெற்றியளிக்கும் பட்சத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டாக களமிறங்குவதற்கும், அவ்வாறு இல்லையேல் தனிவழி செல்வதற்கும் இரு தரப்புகளும் அவதானம் செலுத்தியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய மக்கள் சக்திக்குள் அதிகரித்துள்ளதால், அந்தக் கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலை சஜித் பிரேமதாஸவுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, இரு தரப்பு இணைவுக்குரிய சாத்தியம் அதிகமாக உள்ளது எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam