CIDஇலிருந்து வெளியேறிய யோஷித! முன்னிலையான விமல்
புதிய இணைப்பு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான யோசித ராஜபக்ச, தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதேவேளை, நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக யோஷித ராஜபக்சவுக்கு அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று சற்று நேரத்தில் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விமல் மற்றும் யோஷிதவுக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளனர்.
அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, முன்னிலையாகவுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக இன்று ஆஜராகுமாறு யோஷித ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரி
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னாள் பிரதம பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் முறைப்பாடு செய்ய அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri