விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு! சகோதரர் மனோகரன் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முதல் முறையாக வீரவணக்க நிகழ்வை டென்மார்க்கில் நடத்தவுள்ளதாக அவரது சகோதரன் வேலுப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் அதாவது 2009, மே 18இல் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை இராணுவம் அறிவித்தது.
இந்த நிலையில் பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18ஆம் திகதி நடத்த உள்ளோம்.
வீரவணக்க நிகழ்வு
பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.
பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |