கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு - சடலத்தை அடக்கம் செய்ய முடியாத நெருக்கடி
நாடாளவிய ரீதியில் கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல நெருக்கடிகளுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாணந்துறை பரத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எனினும் கிராம உத்தியோகத்தரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சடலம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தம் முடிந்து கிராம அலுவலர் வரும் வரை சடலத்தை வீட்டில் வைக்க வேண்டிய நிலைமை அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமது சேவைக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமை மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சேவைகளை பெற்றுக் கொள்ள வந்த மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அத்ததுடன், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.