மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத பழச்சாறு விற்பனை: நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத பிளாஸ்ரிக் போத்தலில் அடைத்த பழச்சாறு விற்பனை செய்த குற்றச்சாற்றுடன் தொடர்புடைய 3 பேருக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவை நேற்று(07.03.2024) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருக்கும் பாவனைக்கு உதவாத பழச்சாறு போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
சோதனை நடவடிக்கைகள்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலைமையிலான கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் த.மிதுனராஜ். எஸ்.அமிர்தாப், ஜே.யசோதரன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் வர்தக நிலையங்களை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது ஒரு வர்த்தக நிலையத்தில் அடைத்த பிளாஸ்ரிக் போத்தலிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் பழச்சாற்றை கைப்பற்றி அதனை கொழும்பிலுள்ள பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பியதையடுத்து இதில் தரம் குறைந்த, நியமத்திற்கு மேலதிகமான சல்பர்டை ஒக்சைடு( (Sulphurdioxide)ஐயும் செயற்கையான நிறமூட்டும் பதார்தமான கார்மோசின், சன்ட்செட் மஞ்சள் ( (Carmosine - Suntset yellow & Tarazine ) அதிகமாக கலந்துள்ளதாக பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இது மனித பாவனைக்கு உகந்ததல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இதனையடுத்து குறித்த பழச்சாறு உற்பத்தி நிறவன முகாமையாளர், விற்பனை முகவர், வர்தகர் ஆகியோருக்கு எதிரா பொது சுகாதார உத்தியோகத்தர் மிதுனராஜ் நேற்று (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததையடுத்து நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் பாவனைக்கு உதவாத பழச்சாறு விற்பனை செய்த வர்த்தகரை 20 ஆயிரம் ரூபாவும், முகவரை 20 ஆயிரம் ரூபாவையும் பழச்சாறு உற்பத்தி நிறுவன முகாமையாளரை 40 ஆயிரம் ரூபாவுமாக 80 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் குறித்த நிறுவன போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |