நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை! தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையத்தின் முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று ஏற்பட்ட மின்தடை, இரவு 09:56 மணியளவில் முழுமையாகச் சீரமைக்கப்பட்டது என்று தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இன்று முற்பகல் 11:45 மணியளவில் நாடாளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டது.
மின் கடத்திக் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக, நாடு தழுவிய ரீதியில் இந்த மின் தடை ஏற்பட்டது.
மின் தடைக்கான துல்லியமான காரணம்
இந்த மின் தடைக்கான துல்லியமான காரணம், இன்னும் கண்டறியப்படவில்லை என்று எரிசக்தி மற்றும் மின்சக்தித்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்திருந்தார்.
மேலும், நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கு கொத்மலை மின் நிலையத்தின் மீது மின்னல் தாக்கியமையே காரணம் என எரிசக்தித் துறை பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மின் தடை காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டிருந்தன.
மின் தடையைத் தொடர்ந்து அம்பத்தலே மற்றும் பியகம ஆகிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டதுடன், நீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam