யாழில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தர்களுக்கு மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு
இதன்போது பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டநிலையில் அரிசி தொடர்பான வழக்குகளில் கட்டுப்பாட்டுவிலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் ஒருலட்சம் ரூபா தண்டப்பணமாக அறவிட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 186 வர்த்தகர்களுக்கும், விலையை காட்டாமல் அரிசியை விற்பனை செய்ய மறுத்த 479 வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இடையில் முறுகல்! இறுதியில் அரசி விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் (Video) |
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam