அனுராதபுரத்தில் மனித நுகர்வுக்கு உதவாத இறைச்சி விற்பனை
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என்று கண்டறியப்பட்டதை அடுத்து, அதற்கு சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆலைக்குள் வெள்ள நீர் புகுந்ததாலும், குளிர்பதன வசதி செயற்படாமையாலும், குறித்த இறைச்சி பங்கு மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
இந்தநிலையில் அனர்த்த முகாமைத்துவ துரித இலக்கமான 1926இற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த இறைச்சித் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, பொது சுகாதார ஆய்வாளர்கள் பின்னர் வளாகத்தை ஆய்வு செய்து முழு இருப்புக்கும் சீல் வைத்ததாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.
இந்தநிலையில் குறித்த இறைச்சியின் மாதிரிகள் இன்று (8) அரச ஆய்வாளருக்கு மேலும் சோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளன.
அரச ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri