பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு அரசியல் ஒப்பந்தமே..!

Sri Lanka Upcountry People Anura Kumara Dissanayaka Salary
By Parthiban Feb 16, 2026 05:21 AM GMT
Report

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்படாத நிலையில் செய்து கொள்ளப்பட்டது என்பது நாம் அறிந்ததே.

இது கட்சி அரசியல் மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கம் கொண்ட ஒப்பந்தமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இலங்கையை பாராட்டும் இந்திய - பாகிஸ்தானிய பிரஜைகள்! நள்ளிரவில் குதூகலமான கொழும்பு

இலங்கையை பாராட்டும் இந்திய - பாகிஸ்தானிய பிரஜைகள்! நள்ளிரவில் குதூகலமான கொழும்பு

தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ரூபாய் 400

பெருந்தோட்ட நிறுவனங்கள் இவ் ஒப்பந்தந்திற்கான நன்றியையும் மகிழ்ச்சியையும் ஜனாதிபதியின் (11.02.2026) மலையக விஜயத்தின்போது வெளிக்காட்டிவிட்டன.

அரசாங்கத்தின் நன்றி கடன் இதைவிட அமோகமாக இருக்கும். இது தொடர்பில் மலையக முற்போக்கு சக்திகள் மிகுந்த அவதானத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் செயற்படல் வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு அரசியல் ஒப்பந்தமே..! | Salary Increase For Upland Plantation Workers

ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்ததை தற்செயல் நிகழ்வல்ல அது நன்கு திட்டமிட்ட நிகழ்வு என்பதை அன்றைய காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

ஜனாதிபதியை தோட்ட அதிகாரிகள் காத்திருந்து வரவேற்றதும் தொழிலாளர்களின் ஆடை அலங்காரம் என்பவற்றோடு ஜனாதிபதிக்கு போர்தப்பட்ட பொன்னாடையும் இதனை வெளிப்படுத்தியிருந்தன.

தொழிலாளர்கள் தமக்கான சம்பளம் அதிகரித்த விடயத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி ஜனாதிபதி இருநூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி மகிழ்ந்ததோடு மண்ணில் கால் பதித்தமைக்கு நன்றியும் கூறினர்.

இறுதியில் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம் எனக் கூறியதோடு, மகிழ்ச்சியின் உச்சத்தின் உணர்வில் "நீங்களே கடவுள்" என்றும் கூறினர்.

தொழிலாளர்களுக்கு அதிகரித்து கொடுக்கப்பட்ட ரூபாய் 400 என்பது அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்களும் தங்கள் குடும்ப சொத்தில் இருந்து கொடுக்கவில்லை.

நீதி கோரி மனுக்கள் கொடுப்பது

தொழிலாளர்களின் இரத்த வியர்வை சிந்திய இலாபத்தில் கிள்ளி எடுத்து கொடுக்கும் தொழிலாளர்களின் பணமாகும். அதே பணத்தில் தோட்ட முகாமையாளர்களும், அதிகாரிகளும் பெறும் சம்பளத்தோடும் அனுபவிக்கும் சுகபோக வாழ்வோடும் ஒப்பிடுகையில் சிறு தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல இன்னும் மூன்று வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்த சக்தியாலும் வாய் திறக்க முடியாத அளவிலேயே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு அரசியல் ஒப்பந்தமே..! | Salary Increase For Upland Plantation Workers

அதிலும் வருகைக்காண ஊக்குவிப்பு கொடுப்பனவு மலையகத்தவர்களின் அரசாங்கத்திற்கான ஒத்துழைப்பிலேயே தாங்கியுள்ளது. அரசாங்கம் தமது அரசியல் இலாப நட்ட கணக்கிலேயே அதனை நோக்கும்.

இந்த நிச்சயமற்ற ஊக்குவிப்பு பணத்தினை தேசிய மக்கள் சக்தி மலையக வாக்கு வங்கியில் நிலையான வைப்பாக்கி உள்ளதென்பதை ஜனாதிபதியின் மலையக விஜய நிகழ்வுகள் காட்டுகின்றன.

தொழிலாளர் சமூகம் ஜனாதிபதிக்கு தமது மகிழ்ச்சியை தெரிவிக்கவும் வாழ்த்தவுமே தமது வாய்களை திறந்தனர். மகிழ்ச்சி களிப்பில் ஒளிப்படங்களை எடுத்ததையும் காணக் கூடியதாய் இருந்தது.

நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு இவ்வாறு ஜனாதிபதி செல்லும் போது ஒரு பக்கம் உத்தியோகபூர்வ வரவேற்பு நடந்தாலும், மறுபக்கம் நீதி கோரி மனுக்கள் கொடுப்பதும், வீதி மறியல் போராட்டம் நிகழ்வதும் உண்டு. ஆனால் ஜனாதிபதி மலையக பாதைகளில் செல்லும்போதும் மலையக மண்ணின் மக்களோடு நின்ற போதும் எங்கும் நீதி போராட்டம் நடத்துவதுமில்லை. கோரிக்கை பதாதைகள் தூக்கவும் இல்லை.

மக்களுக்கு அரசியல் விழிப்பு

மலையகத்தின் தொழிற்சங்களினதும் அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் மலையக மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள், தேவைகள், உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளை, குறிப்பாக இந்திய தூதுவரை, தமிழக முதலமைச்சரை ஏன் ஐ.நா பிரதிநிதிகளை சந்திக்க முயற்சிப்பதை நாம் அறிவோம். ஆனால் மலையகத்திற்கு வந்த ஜனாதிபதியை இவர்கள் சந்தித்ததாக தெரியவில்லை.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு அரசியல் ஒப்பந்தமே..! | Salary Increase For Upland Plantation Workers

ஜனாதிபதியின் மலையக விஜயத்தின் போது உற்சாக எழுச்சியைத் தவிர அரசியல் எழுச்சியை காண முடியவில்லை. இதற்கு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளின் தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும்.

மக்களுக்கு அரசியல் விழிப்பு ஏற்படுத்தாது அவர்களை அரசியல் மயப்படுத்தாது அரசியல் அமைப்புபடுத்தாது கட்சி அரசியலுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி தமது சுயநல அரசியலை முன்னெடுப்பது இதற்கு காரணம் ஆகும். இந்நிலை நீடிக்க கூடாது.

மலையக முற்போக்கு சக்திகள் விழிப்படைந்து மக்களை அரசியல் மயப்படுத்தி கட்சி அரசியலுக்கு அப்பால் செயல்படுவதற்கு வழி வகுக்காது விடின் மலையகம் சுற்றுலாத்தலமாகவும், அரசாங்கத்துக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் தொழிலாளர் வாழும் நிலப் பிரதேசமாக மட்டுமே இருக்கும்.

'மலையகம்' மலையகத்தவர்களின் தாயகம். அது எம் தேசிய அடையாளங்களின் இருப்பிடம். இனமாக திரட்சி கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு : ஸ்தம்பிக்கவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள்

சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு : ஸ்தம்பிக்கவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US