3 ஆண்டுகளுக்கு பிறகு கேள்விக்குறியாகுமா தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்..!
அண்மையில், வெளியான அரசாங்கத்தின் அறிவிப்பின் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
இந்த சம்பள உயர்வானது, ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், குறித்த சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறெனில், அதன் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் எவ்வாறு அணுகப்படும் என்னும் கேள்வி பலரால் எழுப்பப்பட்டு வருகின்றது.
3 ஆண்டுகள் ஒப்பந்தம்
இதற்கிடையில், பத்திரிக்கை ஒன்றிற்கு நேர்காணல் வழங்கியுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன்படி அவர், "தொழிலாளர்கள் சார்பில் சிந்தித்து தான் 3 ஆண்டுகளுக்கு மாத்திரம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
3 ஆண்டுகளின் பின்னர் பெருந்தோட்ட உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வருமானம் என்பன அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கேற்ப சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதனை அடிப்படையாகக் கொண்டு இது 3 ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டது.
எனவே, 3 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய 3 ஆண்டுகளின் பின்னர் அப்போதைய நிலைவரம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதிய ஒப்பந்தத்துக்கு செல்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam