மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: பிரதி அமைச்சர் பிரதீப்

Sri Lanka Upcountry People Local government election Sri Lanka 2025
By Thirumal Jul 13, 2025 11:46 AM GMT
Report

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி நேரில் தலையிட்டு வெகுவிரைவில் தீர்வை வழங்குவார் என்று தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபராக (2022) ஹட்டன் கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளராக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற மாயழகு சந்திரலேகா கிங்ஸ்லியின் (SLEAS class I) பணி நயப்பு விழா கொட்டகலை ஆசிரியர் கலாசாலை சமூகத்தினரால் கொட்டகலையில் நடாத்தப்பட்டது.

இந்தநிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழில் கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

யாழில் கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

மக்களுக்கு சேவை

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கிலேயே உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தோம்.

இதற்கு எவ்வித நிபந்தனையும் இன்றியே சில தரப்புகள் ஆதரவு அளித்தன. ஆட்சி அமைப்பதற்காக நாம் எந்தவொரு டீலிலும் ஈடுபடவில்லை. எவ்வித ஒப்பந்தமும் கிடையாது.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: பிரதி அமைச்சர் பிரதீப் | Salaries For Upland Plantation Workers Anura

மக்கள் வழங்கிய ஆணையை மதித்தே செயற்பட்டு வருகின்றோம். மலையகத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் நிச்சயம் விசாரணைகள் இடம்பெறும்.

எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் சட்டத்தின் பிரகாரம் நிச்சயம் தண்டனை வழங்கப்படும். எமது ஆட்சியில் குற்றவாளிகள் தப்ப முடியாது.

மட்டக்களப்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 3 சந்தேகநபர்கள்

மட்டக்களப்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 3 சந்தேகநபர்கள்

சம்பள விவகாரம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் வெகுவிரைவில் தலையிட்டு ஜனாதிபதி தீர்வை வழங்குவார்.

உள்ளக மட்டத்தில் பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில் ஜனாதிபதி மிக விரைவில் நடவடிக்கை எடுப்பார். சிலவேளை அரசாங்கமும் இதற்குரிய தீர்வை வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: பிரதி அமைச்சர் பிரதீப் | Salaries For Upland Plantation Workers Anura

இந்தநிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் மாணவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரன், கல்வி வெளியீட்டுத் திணைக்கள முன்னாள் ஆணையாளர் நாயகம் சு. முரளிதரன், கலாசாலையின் முன்னாள் மற்றும் தற்போதைய விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியர் சி. சிவகுமார், முன்னாள் ஆசிரிய மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

இஷாராவின் நலன் குறித்து கெஹல்பத்ர பத்மே முக்கிய தகவல்

இஷாராவின் நலன் குறித்து கெஹல்பத்ர பத்மே முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US