முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்..! மா. சத்திவேல் அறிக்கை

Anura Kumara Dissanayaka Mullivaikal Remembrance Day Sri Lanka Government NPP Government
By Shan May 17, 2026 02:06 PM GMT
Report

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (17.05.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகன் மீது தந்தை விழுந்ததில் நேர்ந்த துயரம்

மகன் மீது தந்தை விழுந்ததில் நேர்ந்த துயரம்

மே 18..

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான இறுதி ஆயத்தங்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்படுவதை நாம் அறிவோம்.

இது வெறும் நிகழ்வு அல்ல என்பதும் எமக்கு தெரியும். இது எமது வலிகளுக்கான அரசியல் திசை காட்டி. மக்களின் அரசியல் வலிமையையும் அதற்கான மக்கள் திரட்சியையும் உலகிற்கு காட்டி நிற்கும் மக்கள் தளம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்..! மா. சத்திவேல் அறிக்கை | Sakthivel S Statement On The Mullivaikkal Genocide

ஆனால் அரசியல் வலி சுமந்து 17வது ஆண்டினை தொட்டு நிற்கின்ற வேளையில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? எந்த அரசியல் திசையை நோக்கி பயணிக்கின்றோம்? அரசியல் வலி சுமக்கும் ஓர் இனமாக மக்கள் அரசியலை பலமடைய செய்வதற்கும், எம் அரசியல் எதிரிகளுக்கு எதிராக எம் மக்கள் பலத்தை எந்த அளவிற்கு காட்டி உள்ளோம்? என்பதற்கான விடை தேடுகின்ற போதுதான் இவருடத்தில் நாம் ஏற்றுகின்ற சுடர் உயிர் தியாகிகளுக்கு கௌரமாகவும், எம் அரசியல் எதிரிகளுக்கு அரசியல் விழிப்பையும் ஏற்படுத்தும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எமது விடயத்திலும் தோல்வி கண்ட அமைப்பாகவே தெரிந்த போதிலும் எம்மவர்கள் அங்கு செல்வதை புனித யாத்திரையாக்கி ஒவ்வொரு வருடமும் பயணிக்கின்றனர். அதிலும் கூட்டு தன்மை கிடையாது. தனித்தனியாக சொர்க்கம் போக நினைப்தாகவே தெரிகிறது. ஐ.நா மனித உரிமை பேரவைக்கு கடிதம் எழுதுவதிலும் இதே நிலையே தொடர்கின்றது.

கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதில் தொடங்கி அண்மையில் வடக்கு கிழக்கு ஆயர்களின் முயற்சி , தமிழ் சட்டத்தரணி களின் முயற்சி எல்லாமே தோல்வியாகவே நாம் காண்கின்றோம். எமது அரசியல் விடயத்திலும் சர்வேச ராஜதந்திரிகளை கையாள்வதிலும் நாம் இருளில் நடப்பதாகவே தெரிகிறது. அவர்கள் எமக்கு பாடம் சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள், மாவீரர் தின நிகழ்வுகள் எல்லாம் கோயில் திருவிழாக்களாகியுள்ளதாகவே பலர் கருதுகின்றனர். திருவிழாக்கள் உபயக்காரர்களைப் போல ஒழுங்கமைப்பாளர்கள் அவற்றை தத்தமது அடையாளத்திற்கான காட்சிகளாக்கி மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போதை நிலைக்கு தள்ளுவதை என்னவென்று கூறுவது?

கடந்த 17 ஆண்டுகளாக தமிழர் தாயக அரசியலை மக்கள் மையப்படுத்தி பலமடையச் செய்வதில் பெரும்பாலான அரசியல் தலைமைகள் அரசியல் தடம் புரண்டு, அரசியல் அறம் விலகி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் எனலாம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்..! மா. சத்திவேல் அறிக்கை | Sakthivel S Statement On The Mullivaikkal Genocide

அவர்களை தமிழர்களின் குருதி தோய்ந்த நிலத்திற்கு அழைத்து வந்து செங்கம்பலம் விரித்து மேள தாள ரகத்தோடு மேடைக்கு அழைத்துச் செல்வதோடு நின்றுவிடாது செல்ஃபி எடுத்து மகிழும் தலைமுறையினரும் உருவாகியுள்ளமைக்கு நாமே காரணம் என சிந்திக்காதும் உள்ளனர்.இதுவே எமது அரசியல் அவலம்.

இது இவ்வாறிருக்க முள்வாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் பகிரப்படும் கஞ்சியில் சுவை தேடும் கூட்டமும் உருவாகியுள்ளதோடு, சுவையூட்டுவோரும் உள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தின நிகழ்வுகள், தியாகிகள் தினம் தொடர்பில் வடக்கு கிழக்கு தழுவிய பொது கட்டமைப்பு உருவாக்கப்படுதலும் அதன் அரசியல் வழிதடமும் வரையப்படல் வேண்டும்.

அத்தோடு மேற்கூறிய நிகழ்வுகளுக்கான பொது விதிகளும் மக்கள் மயப்படுத்தலும் வேண்டும். அதுவே எம் அரசியலை சரியான திசையில் பயணிக்க வழி சமைப்பதோடு மக்களை திரட்சி கொள்ளவும் செய்யும்.

எமது அரசியல் வழி பயணம் உயிர் தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டது. அது தொடர்பான ஆழமான அரசியல் சிந்தனை மக்கள் பயப்படுத்துவதன் மூலமே எமது அரசியல் இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அதற்காக இவ் வருடம் தியாக சுடர் ஏற்றுவோம். ஒன்றான மக்களாக எழுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

திட்டமிட்ட தமிழின அழிப்பை தொடரும் அநுர..! கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்கக் குற்றச்சாட்டு

திட்டமிட்ட தமிழின அழிப்பை தொடரும் அநுர..! கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்கக் குற்றச்சாட்டு

விட்ஸ் கார் ஒன்றை 1.2 மில்லியன் ரூபாவிற்கு தருவதற்கு தயாரான அநுர தரப்பு! தலைகீழான இன்றைய நிலை..

விட்ஸ் கார் ஒன்றை 1.2 மில்லியன் ரூபாவிற்கு தருவதற்கு தயாரான அநுர தரப்பு! தலைகீழான இன்றைய நிலை..


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US