நாடாளுமன்றத்தை கைப்பற்றுவோம்! மகிந்த அணி சீற்றம் - செய்திகளின் தொகுப்பு
நாட்டின் ஒருமைப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் மாத்திரமே பாதுகாக்க முடியும், ஜனாதிபதி பதவியையும் நாடாளுமன்ற அதிகாரத்தையும் நாங்களே கைப்பற்றுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஆட்சியதிகாரத்தை ஏற்கவும் அதிகாரத்தை துறக்கவும் ராஜபக்சர்கள் தயாராகவே உள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2022ஆம் ஆண்டு தவறான சித்தரிப்புக்களினால் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
ஜனநாயக போராட்டத்தை ஒரு தரப்பினர் பயங்கரவாத போராட்டமாக மாற்றியமைத்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
காலை நேர முக்கிய செய்திகளை பார்வையிட...



