சஜித் தயார்! எனினும் வெருளியாக அல்ல!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை விட்டு விலகினால்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் சஜித் பிரேமதாச ஒரு வெருளி பிரதமராக வர விரும்பவில்லை என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியில் தேவையானவர்கள் இருக்கின்றபோது, ஏன் அரசியல் சாராத பிரதமர் தேவை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
இதேவேளை நாட்டில் நிலவும் அரசியல் முடக்கம் மற்றும் அராஜகத்தை தீர்ப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கினால் ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அதனை தீர்க்கும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும், தற்போது பிரதமர் இல்லாத நிலையில் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் என்பதே தமது முதன்மையான நிபந்தனை என்று அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        