சஜித் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார்-ஐ.தே.கட்சி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எப்போதும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கு சஜித் பெரிய சவாலில்லை
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேருந்து ஓட்டுவதில்லை என்பதால், சஜித் பிரேமதாச அவருக்கு பெரிய சவால் இல்லை.
ஜனாதிபதியை தெரிவு செய்யும் போட்டியில் ஒதுங்கிக்கொண்ட சஜித்
அத்துடன் சஜித் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சி கூடுதல் கவனங்களை செலுத்துவதில்லை. எதிர்க்கட்சித் தலைவரான சஜித் எப்போது தீர்மானகரமான தேர்தல்களில் போட்டியிட மாட்டார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் ஆரம்பத்தில் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்.
இறுதியில் டலஸ் அழகப்பெருமவை முன்நிறுத்தி விட்டு ஒதுங்கிக்கொண்டார். எதிர்காலத்திலும் இதுவே நடக்க போகிறது எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
