சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திப்போம் : சஜித் தெரிவிப்பு
அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 1120 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கம்பஹா,தொம்பே,மல்வான மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்நாட்டில் சிசுக்கள், குழந்தை மற்றும் தாய்மார்களது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 5 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25 வீத குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற இன்னும் பல புள்ளிவிவரங்கள் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதையும், தாய்மார்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறி வருவதையும் எடுத்துக்காட்டுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு
அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளது. இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச நாணய நிதியத்தின் விசேட ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தேவை.
சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு நிதயத்தை நிறுவி, இந்த போசாக்கின்மை நிலையிலிருந்து விடுபட விசேட தேசிய வேலைத்திட்டமொன்று தேவை. ஊட்டச்சத்து குறைபாட்டின் வளர்ச்சி ஒரு தீய சுழற்சியை உருவாக்குதற்கு சமன்.
இது நாட்டின் உற்பத்தித் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
அனைத்து அரச பாடசாலைகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும்
திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் சிறுவர்கள்
என்பதால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும்." - என்றார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam