வெலிக்கடை சிறையில் சஞ்சீவ மற்றும் ஆனந்தவைப் பார்வையிட்ட சஜித்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரும், ஊடகப் பேச்சாளருமான ஆனந்த பாலித்த ஆகியோரைப் பார்வையிட வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயம் நேற்றய தினம் (24.01.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவிக்கையில், ''இந்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மின்சார நுகர்வோர்களுக்காக குறித்த இருவரும் துணிச்சலாக முன் நின்றார்கள்.
சஞ்சீவ தம்மிக்க, ஆனந்த பாலித்த ஆகியோர் விளக்கமறியல்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்புகளுக்காக அவர்கள் முன்நிற்கவில்லை, இந்நாட்டின் சாதாரண மக்களுக்காகவே அவர்கள் முன்நின்றனர்.
சஞ்சீவ தம்மிக்க, ஆனந்த பாலித்த இருவரும் நாளை (26.01.2023) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நேற்று (24.01.2023) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவை நீதிவான் வழங்கினார்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொஹான் சமரநாயக்கவுக்கு
அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் (23.01.2023) இரவு அவர்கள்
இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
