ஐ.தே.கவுடன் இணைந்து செயற்படும் முடிவு சஜித்திடம்...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக் கொண்டுள்ளதாக பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சி பிரதிநிதிகளுக்கு இது குறித்து தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் மேற்கொள்ளப்படும்.
மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களுக்காக இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |