தலதா மாளிகையில் சஜித் அணியினர் வழிபாடு (photos)
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புத்தரின் புனித தந்தத்தை வழிபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இவ் வழிப்பாட்டு நிகழ்வு இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் நிகழ்த்தி எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆசீர்வதித்துள்ளனர்.
அத்துடன் கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதங்களையும் இதன்போது பெற்றுக்கொண்டார்.
மகாநாயக்க தேரரின் நலன் விசாரித்த எதிர்க்கட்சித் தலைவர் நாட்டில்
ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகள் குறித்தும் அவருடன் கலந்துரையாடலிலும்
ஈடுபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் வரலாற்றுச் சிறப்புமிக்க நாத தேவாலயத்துக்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அடக்குமுறை மிக்க கொடுங்கோல் அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஐக்கிய சக்தி பாத யாத்திரை கண்டியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சமய நிகழ்வுகளில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.













