அரசாங்கத்தின் மீது அடுக்கப்படும் குற்றச்சாட்டு! வீதிக்கு இறங்குவோமென எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Samagi Jana Balawegaya Harshana Rajakaruna
By Rakesh Nov 10, 2026 05:04 AM GMT
Report

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் என்பனவற்றின் ஊடாக நாட்டின் பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முழுமையாக நசுக்கி, நாட்டில் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டுவர அரசு தீவிர முயற்சிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் நேற்றைய தினம் (09.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்ற தற்போதைய அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தற்போதைய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகிய இருவரும், இன்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

பலத்த எதிர்ப்பு

இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் வெளிநாட்டுத் தூதரகங்களும் கூடத் தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பிடியாணை இன்றியே ஒவ்வொரு பொலிஸ் அல்லது முப்படை அதிகாரியும் சாதாரண மக்களைத் தன்னிச்சையாகக் கைது செய்யக்கூடிய கொடூரமான சட்டங்களைக் கொண்டுவந்து நாட்டை வட கொரியாவைப் போன்று மாற்றவே அரசு முயற்சிக்கின்றது.

அரசாங்கத்தின் மீது அடுக்கப்படும் குற்றச்சாட்டு! வீதிக்கு இறங்குவோமென எச்சரிக்கை | Sajith Team Harshana Rajakaruna Warning

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு விதமாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் முற்றிலும் வேறு விதமாகவும் பேசும் அரசின் இரட்டை நிலைப்பாடு கேள்விக் குறியாகியுள்ளது. அதேபோன்று, அரசு பலவந்தமான முறையில் 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தைத் திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்தது.

இந்தத் திருத்தத்தின் மூலம் நீதிமன்றங்களுக்கு அரசியல் அழுத்தங்களை வழங்க அரசு செயற்பட்டு வருகின்றது. அதனால்தான், அரசுக்குத் தேவையானவாறு தீர்ப்பு வழங்காத கம்பஹா நீதிவான் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரை இடமாற்றம் செய்தமைக்கு வேறு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை.

இதன்மூலம் அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முற்றாக அழித்து வருகின்றது. எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை வரவு - செலவுத் திட்ட விவாதம் நடைபெறவுள்ளது. இதனால் இந்த ஆண்டில் இப் புதிய சட்டங்களைக் கொண்டுவர முடியாது என்பதை அரசும் ஜனாதிபதியும் நன்கறிவர்.

அரசு சூழ்ச்சி

இருப்பினும், இந்தச் சட்டங்களை அடுத்த வருடம் எப்படியாவது நிறைவேற்ற அரசு சூழ்ச்சி செய்கின்றது. அவ்வாறு அடுத்த வருடம் இந்தச் சட்டங்களைக் கொண்டுவர முயன்றால், பொதுமக்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி வீதியிலிறங்கிப் போராடும்.

அரசு வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். பெலவத்தை அலுவலகத்தின் அலமாரிகளில் போடப்பட்டுள்ள அரசின் கொள்கைப் பிரகடனத்தை எடுத்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரசாங்கத்தின் மீது அடுக்கப்படும் குற்றச்சாட்டு! வீதிக்கு இறங்குவோமென எச்சரிக்கை | Sajith Team Harshana Rajakaruna Warning

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம் என்றனர், மின் கட்டணத்தை மூன்றில் ஒன்றாகக் குறைப்போம் என்றனர், பெற்றோல் மற்றும் டீசல் விலை சூத்திரங்களை ஒழித்து துறைமுகத்துக்கு இறக்கும் விலையிலேயே மக்களுக்கு வழங்குவோம் என்றனர். முடியுமானால் இந்த வரவு - செலவுத் திட்டத்திலாவது இந்தப் பொய் வாக்குறுதிகளுக்கு நியாயம் வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்.

புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதாகக் கூறிய வாக்குறுதியும் இரண்டு ஆண்டுகள் முடிந்தும் நிறைவேற்றப்படவில்லை. 50 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்ததால் கொழும்பு நகரம் மூழ்கிவிட்டதாகக் கொழும்பு மாநகர மேயர் கூறுகின்றார். அப்படியானால் தவறு மழையின் மீதா?

நகைச்சுவையான கதைகளை நாட்டுக்குக் கூற வேண்டாம் எனக் கொழும்பு மாநகர மேயரிடம் கேட்டுக்கொள்கின்றோம். கொழும்பு நகருக்கு இதைவிட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும், மாநகர சபை சாக்கடைத் தொகுதியைச் சுத்தப்படுத்தாமல் அடைபட விட்டமையே பிரதான பிரச்சினை என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

நவம்பர் மாதம் எல் நினோ தாக்கத்தால் பலத்த மழை பெய்யும் என அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்தும் மாநகர சபை நிர்வாகத்துக்கு அது தெரியவில்லை. கடந்த காலங்களையும் மழையையும் குறைகூறிக் கொண்டிருக்காமல், இப்போதாவது வடிகான்களைச் சுத்தப்படுத்த கொழும்பு மாநகர சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெகிழ்ச்சி செயல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெகிழ்ச்சி செயல்

அரசின் தோல்வியால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு நகரும் இலங்கை! முன்னாள் அமைச்சர் அபாய எச்சரிக்கை

அரசின் தோல்வியால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு நகரும் இலங்கை! முன்னாள் அமைச்சர் அபாய எச்சரிக்கை

மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US