மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் - சஜித் விசனம்
டிட்வா சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ள நிலையில், அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை 11.57 வீதத்தினால் அதிகரிக்கத் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சுபீட்சமான தேசத்தையும் சிறந்த வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இன்று மக்களை ஏழ்மைக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் தள்ளிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சியில் இருந்தபோது மேடைகள்தோறும் மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தினால் குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர்.
வழங்கப்பட்ட உறுதி
9,000 ரூபா மின்சாரப் பட்டியலை 6,000 ரூபாவாகவும், 3,000 ரூபா பட்டியலை 2,000 ரூபாவாகவும் குறைப்போம் என உறுதியளித்துவிட்டு, இன்று மக்கள் வழங்கிய ஆணையைத் மறந்து மின்சாரக்கட்டணத்தை 11.57 வீதத்தினால் உயர்த்தத் திட்டமிடுகின்றனர்.

ஜனாதிபதி பகிரங்கமாக வழங்கிய வாக்குறுதியை நம்பியே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். ஆனால் இன்று அந்த நம்பிக்கையைத் துரோகம் செய்து, மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 35 நிமிடங்கள் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri