கற்பனை கதைகளை கூறி மக்களை ஏமாற்றுகிறதா அநுர அரசு..! சஜித் குற்றச்சாட்டு

Central Bank of Sri Lanka Anura Kumara Dissanayaka Sajith Premadasa Economy of Sri Lanka Education
By Rakesh May 21, 2026 02:10 PM GMT
Report

அரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் மீறி, கற்பனையான கனவு உலகக் கதைகளைக் கூறி நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(20.05.2026) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான திட்டம் தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான திட்டம் தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரம்

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்படும் இந்தத் தருணத்தில் ஆளும் தரப்பு முன்வைக்கும் கருத்துக்கள் வியப்பைத் தருகின்றன.

மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு, இன்று 75 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர்.

கற்பனை கதைகளை கூறி மக்களை ஏமாற்றுகிறதா அநுர அரசு..! சஜித் குற்றச்சாட்டு | Sajith Slams Government For Misleading People

வருவாய்களையும் வரிகளையும் நீக்கி, துறைமுகத்தில் இறக்குமதியாகும் எரிபொருளை  அதே விலைக்கு மக்களுக்கு வழங்குவோம் என தேர்தல் மேடைகளில் முழங்கியவர்கள் இன்று மக்களை ஏமாற்றிவிட்டனர்.

மறுபுறம், விவசாயிகளுக்கு இன்று உரமில்லை, கிடைக்கும் உரமும் தரமற்றதாக இருப்பதோடு கறுப்புச் சந்தையிலேயே விற்கப்படுகின்றது.

நெல் கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறினார்கள். இன்று உரம், வனயானை முரண்பாடு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி விவசாயிகளும், கடற்றொழிலாளிகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வறுமை நிலை 

வாழ்க்கைச் செலவு மற்றும் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

ஓய்வூதியர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்கான 15 சதவீத வட்டி வருமானம் பறிக்கப்பட்டுள்ளது.

வறுமை நிலை நாட்டில் 30 வீதம் முதல் 40 வீதம் வரை அதிகரித்துள்ள போதிலும், வறிய மக்களை அரசு முற்றிலும் புறக்கணித்து வருகிறது.

கற்பனை கதைகளை கூறி மக்களை ஏமாற்றுகிறதா அநுர அரசு..! சஜித் குற்றச்சாட்டு | Sajith Slams Government For Misleading People

நாட்டில் நிலவும் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

மேலும், நாட்டில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் நாட்டின் தொழிற்சாலைகள் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

12 இலட்சம் ரூபாவுக்கு விட்ஸ் ரக காரைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சியைப் பிடித்தவர்கள், தற்போது வாகனங்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளனர்.

கல்விச் சீர்திருத்தம் 

கடந்த 16ஆம் திகதி முதல் இந்த வரி நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, இந்த இரகசியத் தகவலைத் தமக்கு நெருக்கமான நண்பர்களுக்கு அனுப்பி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான கடன் கடிதங்களை அனுப்ப வழிவகை செய்துள்ளனர்.

இதன் மூலம் சிலருக்கு நன்மை பெற்றுக்கொடுத்து, நாட்டிற்குப் பல பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கற்பனை கதைகளை கூறி மக்களை ஏமாற்றுகிறதா அநுர அரசு..! சஜித் குற்றச்சாட்டு | Sajith Slams Government For Misleading People

கல்விச் சீர்திருத்தங்களுக்கு நாம் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கல்வியை சீர்குலைப்பதை எதிர்த்தோம்.

கல்விச் சீர்திருத்தம் பேசும் இந்த அரசால் பாடசாலைகளுக்குத் தேவையான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது.

மத்திய வங்கியானது சுயாதீன அமைப்பாக இருப்பதால், காணாமல் போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் விவகாரத்துக்குத் தான் பொறுப்பல்ல எனவும், அது நிதி அமைச்சுக்குரியது எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அநுர அரசு

இந்த அறிக்கையுடன் ஜனாதிபதி தலைமையிலான அரசு உடன்படுகின்றதா? மத்திய வங்கிக்கு இதில் பொறுப்பில்லையா எனக் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

மத்திய வங்கியைச் சுயாதீனமாக்கும் சட்டத்திற்கு அன்று தற்போதைய ஜனாதிபதி எதிராக வாக்களித்திருந்தார். ஆனால், இன்று அவரது ஆட்சியின் கீழ் நாடு நிதி மற்றும் பொருளாதார ரீதியாக ஆபத்தில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அறிவிக்கிறார்.

கற்பனை கதைகளை கூறி மக்களை ஏமாற்றுகிறதா அநுர அரசு..! சஜித் குற்றச்சாட்டு | Sajith Slams Government For Misleading People

யதார்த்தத்தை அரசு விளக்க வேண்டும். "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற கற்பனை உலகைக் காட்டி ஆட்சிக்கு வந்த அரசால் இன்று மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நாம் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என சுட்டிக்காட்டியுளள்ளார்.

அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன்.. யாழ். பல்கலை விரிவுரையாளர் முன்வைத்த குற்றச்சாட்டு

அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன்.. யாழ். பல்கலை விரிவுரையாளர் முன்வைத்த குற்றச்சாட்டு

கண்ணகி அம்மன் கோவில் சுற்றுபுறங்களில் நிரம்பி கிடக்கும் குப்பைகள் - விசனம் தெரிவித்த பொதுமக்கள்

கண்ணகி அம்மன் கோவில் சுற்றுபுறங்களில் நிரம்பி கிடக்கும் குப்பைகள் - விசனம் தெரிவித்த பொதுமக்கள்

மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US