ராஜபக்ச பட்டாளத்தின் அரசியலுக்கு வரும் தேர்தல்களில் முடிவு கட்டுவோம் : சஜித் அணி சூளுரை
எதிர்வரும் தேர்தல்களில் ராஜபக்ச கூட்டணியின் அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றியடைந்தே தீருவார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிவாகை சூடும்.
மொட்டுக் கட்சிக்கும் அந்தக் கட்சியைப் பாதுகாத்து வரும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிர்வரும் தேர்தல்களில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ்வார்கள்." - என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |