நான் ஆட்சிக்கு வந்தால் பணக்காரர்கள் அதிக வரி செலுத்துவர் : சஜித் அறிவிப்பு
தாம் ஆட்சிக்கு வந்தால், பணக்காரர்கள் அதிக வரி செலுத்துவதையும், ஏழைகள் தங்கள் நிலைமைகள் மேம்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கூறியுள்ளார்.
இலங்கை, தமது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததை அடுத்து, சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில், மக்கள் மீதான வரிச்சுமையை இலகுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய சர்வதேச நாணய நிதியத்துடன் தமது கட்சி ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக சஜித் குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய உடன்படிக்கையில் "அடிப்படை மாற்றங்கள்" இருக்க வேண்டும், அவை மிகவும் "மனிதாபிமான முறையில்" மக்கள் மீதான சுமை குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.
ரணில் தரப்பினர், முக்கிய பொருளாதார துறையினரை மேம்படுத்தியுள்ளனர், ஆனால் அவற்றின் விளைவுகள் இன்னும் பல சாதாரண மக்களை சென்றடையவில்லை என்று விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை, சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
ஏற்றுமதி சார்ந்த, அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் மூலம் பிரச்சினையிலிருந்து வெளிவருவது என்பது தனது கொள்கையாகும் என்றும் சஜித் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan