முடிந்தால் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள்: ரணிலை சாடுகிறார் சஜித்

Ranil Wickremesinghe Sajith Premadasa Budget 2024 - sri lanka
By Rakesh Nov 22, 2023 06:49 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

மேலும், 220 இலட்சம் பேரினதும் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்தால் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (22.11.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டு

2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தல் ஆணைகளுக்கு மாறாக நாட்டு மக்களின் உண்மையான ஜனநாயகமே இப்போது முக்கியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள வழக்கு எண்ணைத் தவறுதலாகக் குறிப்பிடும் போது அதன் உள்ளடக்கத்தைப் பற்றி சிந்திக்காமல் வழக்கு எண்ணை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் கூறுவது வெட்கக்கேடானது.

முடிந்தால் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள்: ரணிலை சாடுகிறார் சஜித் | Sajith Says Local Council Elections Should Be Held

வழக்கு எண் மாறினாலும், நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களின் பெயர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை நியமித்த 134 பேருக்கும் சரியாக ஒன்றை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாது என்றாலும், அதனை வாசித்துப் புரிந்துகொள்ளும் திறன் ஜனாதிபதிக்கு இருந்தாலும், ஜனாதிபதியை நியமித்த 134 பேருக்கும் முட்டாள்தனமான திருப்தியை வழங்க அதே காரணத்தை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டமை வருந்தக்க விடயம்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது ‘மகிந்த திருடன் எமக்கு வேண்டாம்’ எனக் கூறி கத்தினாலும், திருடன் என்று அழைத்த நபருடன் பிறந்தநாள் கேக் வெட்ட ஜனாதிபதி சென்றார்.

ஜனாதிபதி தற்போது மக்கள் அபிப்பிராயம், மக்கள் ஆணையை புறம் தள்ளி, தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்துச் செயற்பட்டு வருகின்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முதலில் நடத்துவது ஜனாதிபதியின் பொறுப்பாகும். இவ்வாறு மக்கள் ஆணையை உரசிப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமாயின், கிடைக்கும் மக்கள் ஆணையின் கீழ் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்றார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US