தோல்வியடைந்த பொருளாதார கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு
அரசாங்கத்தினால் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத வகையிலான தோல்வியடைந்த பொருளாதார கொள்கைகளை அரசாங்கம் பின்பற்றுவதாக கூறியுள்ளார்.
உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு
குறுகிய காலத்தில் உணவு பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளதாகவும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும், இதனால் வறிய மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் வலுவான பொருளாதாரக் கொள்கைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள பொய் வாக்குறுதியளித்து ஆட்சி பீடம் ஏறும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |