சஜித்தின் இந்திய விஜயம்! உட்கட்சியில் குழப்பம்
இந்திய உத்தியோகப்பூர்வ விஜயத்தில் தங்களை அழைத்துச் செல்லவில்லையென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் மனக் கசப்பில் இருப்பதாக கட்சியின் உள்ளக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி
எதிர்க்கட்சித் தலைவரின் இந்திய உத்தியோகப்பூர்வ விஜயத்தில் கட்சித் உறுப்பினர்களை அழைத்துச் செல்லவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் சில உறுப்பினர்கள் மனக் கசப்பில் இருக்கின்றனர்.

சஜித் பிரேமதாச தனது விஜயத்தில் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் மற்றும் வெளி உறவு கொள்கை வகுப்பாளர்களையாவது அழைத்துச் சென்றிருந்தால் அந்த பயணம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என அறிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் விஜயத்தின் போது கட்சியின் அதிகாரி ஒருவர் மற்றும் நகரசபை உறுப்பினருடன் மூவரே சென்றுள்ளனர். இந்திய விஜயத்தின் போது இந்தியாவின் பெரும் அரசியல்வாதிகள் இருவரை சந்தித்த சஜித் பிரமதாச,குறுகிய கால விஜயம் மற்றும் திடீர் ஏற்பாடு என்பதால் யாரையும் அழைத்து செல்ல முடியவில்லை என சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை உள்ளீர்க்க முயற்சிக்கும் தாவூத் இப்ராஹிம்.. அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்!