ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான லயனல் பிரேமசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
காலி மகிந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான அவர், தொழில் ரீதியாக சட்டத்தரணியாவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்த அவர், காலி மேயராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மீண்டும் காலி மாவட்ட மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.
கனடாவின் பிரதி உயர்ஸ்தானிகர்
லயனல் பிரேமசிறி 2004இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.
அதன்பின்னர் அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து 2007 - 2010 காலப்பகுதியில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சராக அவர் கடமையாற்றினார்.
மேலும், கனடாவின் பிரதி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |