இலங்கையின் இரத்தினக்கல் தொடர்பில் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்ட விடயம்
பல நாடுகள் இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு இணையவழி முறையைப் பயன்படுத்தினாலும், இந்நாட்டில் அதற்கான வசதிகள் மிகக் குறைவு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இரத்தினக்கல் தொழில்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது
இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் நிலவும் பல பிரச்சினைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் இரத்தினக்கற்கள், வைரங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் 276 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
தற்போது நேரடி ஏற்றுமதிக்கு மேலதிகமாக கோவிட் தொற்றினால் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்மையினாலும் இரத்தினக்கல் தொழில்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரத்தினக்கல் ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள் மட்டுமன்றி, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கூட கடும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
