தேசியத் தலைவராகச் செயற்பட்ட சம்பந்தனின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு : சபையில் சஜித் இரங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தன்(R. Sampanthan) எம்.பியின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இரங்கல் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாட்டுக்காகத் தொடர்ந்து முன்னிருந்த இரா. சம்பந்தனின் திடீர் மரணம் தொடர்பில் தனது கவலையைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
சம்பந்தனின் மரணம் பாரிய இழப்பு
அவர் மேலும் கூறுகையில், "சம்பந்தனின் மரணம் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய இழப்பாகும். அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசியத் தலைவராகச் செயற்பட்டார்.

தேசியத்துவம் தொடர்பில் அவர் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார். அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன, சமய, குல பேதமின்றி சகலரையும் ஒரே மாதிரியாக மதித்து பழகிய தலைவராவார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் இன்று பொரளை கொழும்பு - பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அங்கு சென்று சம்பந்தனின் புகழுடலுக்குத் தனது மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்தினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam