சஜித்தை பிரதமராக்க ஜனாதிபதி இணக்கம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என ஜனாதிபதி கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என ஜனாதிபதி கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சஜித்திற்கு பச்சைக் கொடி காட்டிய ரணில்
சிறுபான்மை கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போது இந்த விடயம் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சிறுபான்மை கட்சிகள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனித் தனி நபர்களாகவோ தனிக் கட்சிகளாவோ அன்றி சஜித் தலைமையிலான ஒட்டுமொத்த ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதே பொருத்தமானது என ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்க விரும்பும் விடயத்தை மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளதாக சிங்கள வானொலியென்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam