ராஜபக்ச கும்பலுக்கு எதிரான விசாரணைக்கு என்ன நடந்தது..! அரசாங்கத்திடம் சஜித் கேள்வி
கடந்த மே 9ஆம் திகதி அரச வன்முறையை முன்னெடுத்த ராஜபக்சக்கள் மற்றும் அந்தக் கும்பல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, விசாரணைகளுக்கு என்ன நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச மிலேச்சத்தனம்
மாறாக தமித அபேரத்ன கலைஞர்கள் போன்று இளைஞர், யுவதிகளைக் கைது செய்வதன் மூலம் அரச மிலேச்சத்தனத்தைக் காட்டுவதையே அரசாங்கம் செய்வது வருகின்றது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபோன்ற வன்முறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிக்கடைக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் நலன் விசாரிப்பதற்காக இன்று சென்ற எதிர்க்கட்சித் தலைவர், பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொருவரும் தாங்கள் நம்பும் ஜனநாயக அபிப்பிராயத்துக்காக முன் நிற்கும் உரிமையை எந்த அரசாங்கத்தாலும் அல்லது எந்தத் தரப்பாலும் மீற முடியாது.
இந்த நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீற ஒருபோதும் இடமளிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri