உயர்நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்துச் செயற்படும் அரசாங்கம்: எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை

Sajith Premadasa Sri Lanka Sri Lanka Magistrate Court
By Rakesh Jul 29, 2024 01:48 PM GMT
Report

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாட்டின் சட்டத்தை அப்பட்டமாக மீறிச் செயற்படுபவர்கள், கடும் தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதுளை மாவட்டம், பசறை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பசறை நகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கான ஆதரவு தொடர்பில் மகிந்த கட்சியின் அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கான ஆதரவு தொடர்பில் மகிந்த கட்சியின் அதிரடி அறிவிப்பு

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

"நாட்டில் இன்று ஒரு வினோதமான அரசே காணப்படுகின்றது. இந்த அரசு உயர்நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்துச் செயற்படுகின்றது.

நாட்டின் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்களைப் பின்பற்றுகின்றார்கள் இல்லை. பதில் ஜனாதிபதி, அவரின் வகுப்புச் சகாவான பிரதமர், சபாநாயகர், நாட்டைச் சீர்குலைத்த திருடர் தரப்பு ஆகியோர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாட்டின் சட்டத்தை அப்பட்டமாக மீறிச் செயற்படுகின்றனர்.

உயர்நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்துச் செயற்படும் அரசாங்கம்: எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை | Sajith Premadasa Warned

ஜனாதிபதியும் பிரதமரும் கூறும் சட்டமே இன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவர்கள் அரசமைப்பை அப்பட்டமாக மீறி வருகின்றனர்.

நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்பை உதாசீனப்படுத்தி வருகின்றனர். அவர்கள் எண்ணுவது போல், அவர்கள் சொல்வது போல் நாட்டின் சட்டமாகக் கருதப்பட்டால் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே நான் அவர்களுக்குக் கூற வேண்டும்.

இந்த நாட்டு மக்கள் நீதி, நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கொண்ட யுகத்தை உருவாக்கும்போது, அரசமைப்பை மீறுபவர்கள் சட்டத்துக்கு முகம் கொடுத்து கடும் தண்டனையை எதிர்நோக்க நேரிடும்.

கோர விபத்தில் தாய் மரணம் - உதவியின்றி தவிக்கும் பிள்ளைகள்

கோர விபத்தில் தாய் மரணம் - உதவியின்றி தவிக்கும் பிள்ளைகள்

வாழ்க்கை நெருக்கடி

வாழ்க்கை நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்கு இப்போது தீர்வும் பதில்களுமே தேவை. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு, நியாயமான காலத்துக்குள், துக்கம், அசௌகரியம், அழுத்தங்களைச் சந்திக்க நேரிடாத மக்கள் வாழ்க்கையை உருவாக்கித் தருவேன்.

உயர்நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்துச் செயற்படும் அரசாங்கம்: எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை | Sajith Premadasa Warned

மாளிகைகளில் சுகபோகமாக வாழும் நாட்டை ஆளும் பிரபுக்களுக்குச் சாதாரண மக்கள் படும் துன்பம் புரிவதில்லை. இவர்களுக்கு இரக்கமும் கருணையும் இல்லை.

இவ்வாறான ஆட்சியாளர்களால் வங்குரோத்து நிலையில் உள்ள எமது நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. கருணை கொண்ட, மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் வலிமையான, ஆற்றல் மிக்க, நேரடியாக முடிவெடுக்கும் தலைவரும் அரசும் நாட்டுக்குத் தேவை.

நாம் மாளிகை அரசியல் விளையாடும் அரசியல்வாதியல்லாததால், அந்த மாளிகைகளை இலவசக் கல்வியின் கீழ் நவீன தொழில்நுட்பங்களைக் கற்பிக்கும் கல்வி நிலையங்களாக மாற்றி, இலவச உயர்கல்வி நிலையங்கள் மூலம் உலகையே வெல்லும் ஸ்மார்ட் மாண தலைமுறையை உருவாக்குவேன்." என்றார். 

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US