சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு: ப.சந்திரகுமார்
தமிழர்களின் ஏக பிரதிநிதியான தமிழரசுக்கட்சியே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று கிடைக்கும் என ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - திருமலை வீதி தாண்டவன்வெளி பிரதேசத்திலுள்ள மக்கள் சக்தி கூட்டணியின் மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாரின் காரியாலயத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக்கட்சி சிதைப்பு
விடுதலைப்புலிகளின் போராட்டத்தை சிதைத்தது போன்று தமிழரசுக்கட்சியை சிதைப்பதற்கு ஆயுதம் தாங்கி போராடி இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்த ஓட்டுக்குழுக்கள் எல்லோரும் சேர்ந்த குழுவே இந்த தமிழ் பொது வேட்பாளர். எனவே மக்கள் தமிழரசுக்கட்சி ஆதரிக்கும் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச்செய்வார்கள்.
ஆயுதம் தாங்கி போராடி இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்த ஓட்டுக்குழுக்கள் எல்லோரும் இந்த தமிழ் பொது வேட்பாளருடன் சேர்ந்திருக்கின்றனர். எனவே ஒட்டுக்குழுக்கள் தான் பொது வேட்பாளர்.
எனவே ஆளும் கட்சி என்பது ஜனநாயக கட்சி அது தேசிய கட்சி. நாட்டில் எல்லா பாகங்களிலும் கிளையுண்டு அது தரகர் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு இயங்குகின்றது.
இந்த பொது வேட்பாளரில் நா.உறுப்பினர்; சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பன், அவ்வாறே மட்டக்களப்பில் ரேலோ கட்சியின் நா.உறுப்பினர் கோ.கருணாகரன், வெளிப்படையாக மக்களிடம் ரணிலுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து வருகின்றார்.
எனவே இவர்கள் அனைவரும் தேர்தலில் ஒரு கைகூலியாக செயற்படுகின்றனர் என புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் நன்கு தெரியும்.
அரச காணிகளில் மோசடிகள்
அதேவேளை இந்த மாவட்டம் இரத்தம் சிந்தி காக்கப்பட்ட மண் அந்த மண்ணை கபளீகரம் செய்து கொண்டுசென்று வெளிமாவட்டங்களில் விற்பவர்கள் நல்லாக இருந்ததாக சரித்திரம் இல்லை.
அவ்வாறே மாவட்டத்தில் அரச காணிகளில் நிறைய மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன் சில அரசியல்கட்சிகள் தங்களுக்கு எற்றால் போல வருமானத்தை செய்து சகலத்தையும் சூறையாடியுள்ளனர்.
எனவே எமது தலைவர் சஜித் ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல் மோசடிக்கு எதிராக ஒரு ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்து ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
அதேவேளை எதிர்வரும் காலங்களில் இந்த மோசடி கும்பல்களுக்கு மக்கள் தகுந்த பாடம் படிப்பிப்பார்கள். எங்களுக்கு எதிராக சில கட்சிகள் பொய்யான பிரசாரங்களை செய்துவருகின்றனர் .
எனவே நாங்கள் கிராமம் கிராமமாக வீடு வீடாக சென்று விளக்கமளித்து வருகின்றோம். 90 வீதமான மக்கள் சஜித் தமது இதயத்தில் இருப்பதாகவும் அவருக்கு வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.இருந்தபோதும் மக்கள் எதிர்பார்கின்ற மாற்றம் ஒன்று நடக்கும் நிச்சயம் வெற்றி உறுதியாகிவிட்டது.
எனவே கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் இலஞ்ச ஊழல், கொலைகளுக்கு நீதி கிடைக்காமல் வீதியில் இறங்கி போராடினார்கள். அதற்கான சந்தர்ப்பம் ஜனநாயக முறையில் கிடைத்துள்ளது.
அதனை சரியாக பயன்படுத்தி சஜித் பிரேமதாசவின் டெலிபோன் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி இடுங்கள். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் 22 ஆம் திகதிக்கு பின்னர் மலரும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |