இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளில் அதிக அளவில் கடன் பெற்றுக்கொண்ட 10 முக்கியஸ்தர்கள்
அரச வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு செலுத்தாத முக்கியஸ்தர்களை அம்பலப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய வங்கிகளில் அதிக அளவில் கடன் பெற்றுக்கொண்டு அவற்றை மீள செலுத்தாத 10 முக்கியஸ்தர்கள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடன் செலுத்துகின்ற போது சிறு வியாபாரிகளுக்கு ஒரு சட்டமும் முக்கியஸ்தர்களுக்கு மற்றும் ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்துவது ஏற்புடையது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகளில் கடன்
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன பாரிய வர்த்தகரிகளின் கடன் தொகைகளை மீளப் பெற்றுக் கொள்ளவில்லை என மக்கள் கருதுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய அளவிலான கடன்களை மீள பெற்றுக் கொண்டிருந்தால் வங்கிகளின் திரவத்தன்மை குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் பெற்றுக்கொண்டு மீள செலுத்தாத நபர்கள் யார், நிறுவனங்கள் எவை என்பது குறித்த தகவல்களை ஏன் அம்பலப்படுத்த முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடன் தொகை
இவ்வாறு கடன் செலுத்த தவறியோர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறிய தொகைகளை கடனாக பெற்றுக் கொண்டவர்கள் அது சொத்துக்கள் முடக்கப்பட்டு கடன் மீள அறவீடு செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் பாரிய அளவில் கடன் பெற்றுக் கொண்டவர்கள் கடன் மீள செலுத்துகை மேற்கொள்ளாத போது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
