மயானத்திலிருந்து மக்கள் சேவையா..! சஜித் வெளியிட்ட தகவல்
மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை முடியாது. இந்த கொலை கலாசாரத்திற்கு இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வடகொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்டார். அவர் தலைவராக தெரிவு செய்யப்படுவதை தடுக்க பல செயற்பாடுகளை மேற்கொண்டனர். அவை அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்து
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அறிவித்தும் பாதுகாப்பு கோரினார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அவ்வாறான நிலையில் உள்ளுராட்சி பிரதிநிதிகளுக்கு மக்கள் தினம் நடத்த முடியுமா?
ஜே.வி.பினருக்கு மக்கள் தினம் நடத்த தெரியாது. அவர்களுக்கு மக்கள் தினம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.