ரோஹிங்கிய அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் : அரசிடம் சஜித் கோரிக்கை
ரோஹிங்கிய அகதிகளை இலங்கையை விட்டு அனுப்ப வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அண்மையில் மியன்மார் நாட்டு ரோஹிங்கிய அகதிகள் குழுவொன்று முல்லைத்தீவை வந்தடைந்தனர். இவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற அரசு தயாராகி வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இம்மக்களைத் திருப்பி அனுப்புவது மனிதாபிமான சட்டங்களை மீறும் செயலாகும்.
இம்மக்களுக்கு மியன்மார் நாட்டில் பாராபட்சக் கவனிப்புக் காட்டப்படுகின்றது, சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர் என உலகமே ஏற்றுக்கொண்டுள்ளதால், அவர்கள் அனைவரையும் இலங்கையிலிருந்து வெளியேற்ற எடுக்கும் முயற்சியை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.