யாழில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியினரும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சுமந்திரம் பத்திரிகை
இதன்போது, கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியுள்ளனர்.
இதேவேளை, சுமந்திரனால் வெளியிடப்பட்ட சுமந்திரம் பத்திரிகை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதாகிருஸ்ணன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.





அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
