பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பேன்: உறுதியளித்த ரணில்
பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்கி சட்டபூர்வமான காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ரணில் இயலும் வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
பொய்யான வாக்குறுதி
பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க இடமளிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, படிப்படியாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அடுத்த 5 வருடங்களில் இந்த நாட்டில் பாரிய பொருளாதார, அரசியல், சமூக புரட்சியை ஏற்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
சஜித்தும் அநுரவும் மாற்றங்களை செய்வதாகச் கூறினாலும், முகங்களை மாற்றும், மாற்றம் நாட்டுக்கு அவசியமற்றதெனவும், மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாக இருந்தால் வரிசையில் நின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான மாற்றத்தில் அன்றே இணைந்திருப்பார்கள் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், ஐ.எம்.எப் உடன் உரையாடி, வரிச்சுமையை குறைப்பதாக சஜித் போலி வாக்குறுதிகளை வழங்கினாலும், இதுவரையில் எவரும் ஐ.எம்.எப் உடன் பேசவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மறுசீரமைப்புக்களால் ஏற்பட்டிருக்கும் வெற்றிகளைப் பாதுகாக்க வேண்டுமென ஐ.எம்.எப் வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக நுவரெலியா காமினி மத்திய மகா வித்தியாலய மாணவர்களை நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலைக்கு புதிய காணியொன்றை வழங்குவதற்கான ஆவணங்களை அதிபரிடம் கையளித்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
