யாழில் இளம் யுவதி தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு
யாழில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம்(15.09.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய கலைச்செல்வன் யதுசாயினி ஜோதியே உயிர்மாய்த்துள்ளார்.
மரண விசாரணை
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் குறித்த யுவதி நேற்று(15) மதியம் தனியாக வீட்டில் இருந்த போதே தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இதையடுத்து, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
