கிழக்கு லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவம்: பெண்ணொருவர் கைது
கிழக்கு லண்டனில் (East London) நிகழ்ந்த கத்திக்குத்து கொலை சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது 30 வயது மதிப்புள்ள பெண் ஒருவர், டவர் ஹாம்லெட்ஸில் டக்கெட் தெருவில் உள்ள வீடொன்றில் நேற்று கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதன்போது, அவசர சேவைகள் பிரிவினர் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கியுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 32 வயதான பெண் ஒருவரே இந்த கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 37 வயதான ஆண் ஒருவர் அப்பெண்ணுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் முன்னதாக அந்த வீட்டில் இருந்ததாகவும், ஒருவரையொருவர் அறிந்திருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
