ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை
மறுசீரமைக்கப்படவுள்ள பல முக்கிய நாடாளுமன்ற குழுக்களின் முக்கிய பதவிகளுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்குமாறு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இணக்கத்தை கோரியுள்ளது.
அதன்படி, பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்), பொதுக் கணக்குக் குழு (கோபா), பொது நிதிக் குழு (சிஓபிஎஃப்) ஆகியவற்றின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு சபையில் வழங்குமாறு அந்த கட்சி கோரியுள்ளது.
இந்தக் குழுக்களின் முன்னாள் தலைவர்கள், சுயேச்சை உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த போதிலும், அவர்கள் அரசாங்கத் தரப்பு - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரதிநிதிகளாகவே உள்ளனர்.
தலைமைத்துவம், எதிர்க்கட்சிக்கு வழங்கபடாமை
இந்தக் குழுக்களின் தலைமைத்துவம், எதிர்க்கட்சிக்கு வழங்கபடாமை தொடர்பில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, உத்தேச அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையாது, ஆனால் நாடாளுமன்ற குழு அமைப்பு மூலம் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் ஒப்புதலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல் |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
