பேரணி ஒருபுறம் சஜித் மற்றுமொரு புறம்.. நீதிமன்ற வாசலில் அளித்த உறுதி!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு எப்படியாவது நீதி வாங்கித் தருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் போராட்டமொன்றை நடத்தினர்.
இதன்போது, அங்கு வருகை தந்த சஜித்,
“ஏமாற்றப்பட்டவர்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர், அவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
சஜித்தின் உறுதி
இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மில்லியன் கணக்கில் இவர்களிடம் பணம் வாங்கியும் அவர்களுக்கு ருமேனியாவில் வேலை எடுத்துக் கொடுக்கப்படவில்லை.

மாறாக, அவர்கள் வீதியில் விடப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் சொத்துக்களை அடகுவைத்து மோசடிக்காரர்களுக்கு இவர்கள் பணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் விவசாயிகள், இராணுவத்தினர் மற்றும் சாதாரண பொதுமக்கள் ஆகியோர் உள்ளனர்.

பாதுகாப்பு அமைப்பில் உள்ள கோளாறே இவர்களின் இந்த நிலைக்கு காரணம். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாம் கதைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam