பௌத்த தர்மத்தை காக்கும் கடவுள்களே தேரர்கள்! சஜித்தின் அதிரடி பாய்ச்சல்
பௌத்த தேரர்களின் மாநாடு (சங்க சம்மேளனம்) ஒன்றை நடத்தி பௌத்த தர்மத்தை பாதுகாக்க எடுக்கும் திட்டங்களுக்கு நாம் எப்போதும் பக்கச்சார்பாகவே இருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்த சஜித் பிரேமதாச அவை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே பௌத்த தேரர்களின் மாநாட்டுக்கு தனது உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். அங்கு அவர் உறுப்பினர்களுடன் மாநாட்டின் பின்ன பக்க ஆசனங்களிலே அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
பௌத்த தேரர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
அப்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டிந்தார்.தொடர்ந்து பேசிய அவர்,
பௌத்த தேரர்களுக்கு மட்டுமல்ல பௌத்த தர்மத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.தேரர்கள் தான் எமது கலாசாரம் மற்றும் சம்பிரதாயங்களை பாதுகாப்போர்.அவர்களுக்கு அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளமை தெளிவான காரணங்களாகும்.

தேரர்களுக்கு உரிய கௌரவம் வழங்குவதில்லை.அவர்களை கனக்கில் எடுப்பதில்லை.நாம் எப்போதும் பௌத்த தரமத்துக்கும் தேரர்களுக்கும் உரிய மரியாதையை செலுத்துபவர்கள்.
பௌத்த பிக்குகளுக்கு மட்டுமல்ல ஏனைய மதத் தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது.அது ஏற்றுக் கொள்ள முடியாதது.அப்படி யாருக்கும் செய்ய முடியாது.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam