ஜனாதிபதி - பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும்: தேரர்கள் மாநாட்டில் ஆவேசம்
வடக்குக்கு சென்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரணி அமரசூரிய ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கொட்டபிட்டிய ராவுல தேரர் தெரிவித்துள்ளார்.
அதாவது வடக்குக்கு பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு வரும் தென்பகுதியினர் வைராக்கியத்தை விதைப்பதாக ஜனாதிபதி கூறிய விடயம் மற்றும் பிரதமர் மன்னாரில் தெரிவித்த கருத்தான, யுத்தத்தை எங்களை கேட்டா மேற்கொண்டனர் என்ற கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் பௌத்த மகா சம்மேளனத்தில் இன்று (20.02.2026)உரையாற்றும் போதே கொட்டபிட்டிய ராவுல இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பௌத்த கலாசாரம் அழிக்கப்படுகிறது
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நீங்கள் நேர்மையாக நடவுங்கள். நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக எங்கேயும் இரகசியமாக கதைக்க முடியாது. இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் அனைவரும் அறிந்து கொள்வர்.
பிரதமர் ஹரிணி, மன்னாரில் நீங்கள் தெரிவித்த கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக அந்த கருத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ளவும்.

ஜனாதிபதி, தவறுதலாக சொல்லிவிட்டேன் மன்னிக்கவும் என்று சொன்னால், நாங்கள் மன்னிப்போம். அப்படியில்லை என்றால் அந்த கருத்துக்களை அப்படியே வைத்துக் கொண்டு பௌத்த விரோதத்துக்கு எதிராக போர் தொடுப்போம்.
வடக்கு, கிழக்கில் 1000 திற்கும் மேற்பட்ட புராதன தொல்பொருள் இடங்கள் இருக்கின்றன. கிழக்கில் சில இடங்களின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. அதை உடனடியாக மீள் அமைக்க வேண்டும் என ஜனாதிபதியை கோருகிறோம்.

எமது பௌத்த புராதன தொல்பொருள் மற்றும் எமது சம்பிரதாயங்கள் இல்லாதொழிக்கப்படுகின்றன.இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு சிங்கள கிராமமே நாவற்குழியாகும் அதை பாதுகாக்க வேண்டும என குறிப்பிட்டுள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri