ஜனாதிபதி போட்டியில் களமிறங்கும் சஜித் பிரேமதாச!குவியும் ஆதரவு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி போட்டியில் களமிறங்குவதற்கான தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய நாடாளுமன்றக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்றக் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கூடியுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னதாக அறிவித்ததுடன், அது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுவினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானம் இன்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி தெரிவு
ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் ந்வடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி காலையும் ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கை 20 ஆம் திகதியும் நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்,எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளுடன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பல கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.